search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முத்தையா முரளிதரன்"

    வெங்கட்பிரபு சிம்புவை வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கும் நிலையில், அடுத்ததாக முத்தையா முரளிதரனின் வாழ்க்கையையும் படமாக எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #MuttiahMuralitharanBiopic #VenkatPrabhu
    இயக்குனர் வெங்கட்பிரபு சிம்புவை வைத்து அடுத்த படத்தை இயக்கவிருப்பதை உறுதி செய்து இருக்கிறார். அந்த படத்தை சுரேஷ் காமாட்சி இயக்கவிருக்கிறார். 

    ’திரைக்கதை உருவாக்க பணிகள் சென்று கொண்டிருக்கிறது. அது முடிந்த பின்னர் உடன் நடிக்கும் நடிகர், நடிகைகள், படத்தின் பெயர் முடிவு செய்யப்படும். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு துவங்கப்படும்’ என்று கூறி இருக்கும் அவர், அடுத்து பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை படமாக இயக்கப் போகிறார்.

    இதற்காக முத்தையா முரளிதரனை சந்தித்து பேசி இருக்கிறார். விரைவில் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முத்தையா முரளிதரனின் வாழ்க்கை நிறைய திருப்பங்கள் நிறைந்தது. அவர் பந்து வீசும் முறையை சந்தேகித்து சர்வதேச கிரிக்கெட் ஆணையம் நிறைய சோதனைகள் வைத்தது. அவற்றில் இருந்து மீண்டு வந்து உலக சாதனைகளை படைத்தார்.



    கிரிக்கெட் மீது அதீத விருப்பம் காட்டும் வெங்கட் பிரபு கிரிக்கெட்டை மையப்படுத்தி சென்னை 600028 படத்தின் இரண்டு பாகங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #MuttiahMuralitharanBiopic  #VenkatPrabhu

    இலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் அளிக்கப்பட்ட ஆலோசகர் பதவி தனக்கு வேண்டாம் என அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் மறுத்துள்ளார். #SriLankacricket #MahelaJayawardene #MuttiahMuralitharan #consultantrole

    கொழும்பு:

    இலங்கை கிரிக்கெட் அணியின் ஆட்டம் நாளுக்குநாள் மோசமடைந்து வருகிறது. இதையடுத்து அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களை ஆலோசகர்களாக நியமிக்கலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்தது. முரளிதரன், ஜெயவர்தனே, குமார் சங்கக்காரா உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு கமிட்டி அமைக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.

    அதன்படி, இலங்கை கிரிக்கெட் அணி தேர்வுக்குழு முதலில் மகேலா ஜெயவர்தனேவை அணுகியது. ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். அதைத்தொடர்ந்து முத்தையா முரளிதரனை அணுகியது. ஆனால் இதற்கு ஒத்துழைப்பு தர அவரும் மறுத்துவிட்டார்.

    தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வரும் இலங்கை ஏற்கனவே கடந்த வாரம் வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது.



    இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் இந்த ஆலோசனைக் குழு முடிவு குறித்து முரளிதரன் கூறுகையில், ‘இந்த அழைப்பு நேர்மையற்றது, சூழ்ச்சி நிரம்பியது கிரிக்கெட் நிர்வாகம் கேவலமான ஒரு நிலையில் இருக்கும் போது எங்களைப் பயன்படுத்தப்பார்க்கிறது’, என கூறினார்.

    இதுகுறித்து ஜெயவர்தனே கூறுகையில், ‘இந்த சிஸ்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. நேரத்தை வீணடிக்க வேண்டாம், எங்களைப் பயன்படுத்த வேண்டாம்” என கூறியுள்ளார். #SriLankacricket #MahelaJayawardene #MuttiahMuralitharan #consultantrole
    ×